முக கவசம் கட்டாயம் தாம்பரம் கமிஷனர் உத்தரவு
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், தினமும், 30 முதல் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. இதனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனை, ஹோட்டல், வணிக வளாகம் என பொது இடங்களில், கூடும் மக்கள், முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதேபோல், தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!