ADVERTISEMENT
சென்னை :அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஜூன் 19ம் தேதியன்று, 'சுதா ரகுநாதன் தினம்' அறிவிக்கப்பட்டது. இதற்கான பிரகடனத்தை, நியூயார்க் மேயர் எரிக் ஆடம் வெளியிட்டார்.
தமிழகத்தை சேர்ந்த பிரபல கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதன். இசை கச்சேரிகள் வாயிலாக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவரது இசை அறிவு, சமூக சேவை உள்ளிட்டவற்றை பாராட்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டார்.
இவரது திறமை, சேவை மனப்பான்மை குறித்து, நியூயார்க் மேயர் எரிக் ஆடம் கூறியதாவது:
தன் இனிய குரல் வளத்தால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த சுதா ரகுநாதன், கடல் கடந்து பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் நடத்தும் அறக்கட்டளை வாயிலாக பலருக்கு நன்மை கிடைத்துள்ளது. அமெரிக்காவின், சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்திய - அமெரிக்கர்களின் பங்களிப்பு முக்கியமானது.
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுதா ரகுநாதனின் திறமை, சேவையை பாராட்டி, நியூயார்க்கில், 2022ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி, 'சுதா ரகுநாதன் தினமாக' அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கான பிரகடன ஆவணத்தை, பாடகி சுதா ரகுநாதனிடம், நியூயார்க் மேயர் அலுவலக வர்த்தகம், முதலீடு மற்றும் புதுமை துறைக்கான துணை கமிஷனர் திலீப் சவுகஹான் வழங்கினார்.

கறுப்பினத்தவரை மருமகனாக ஏற்றுக்கொண்ட பெருந்தன்மை மிக்கவர்