Load Image
dinamalar telegram
Advertisement

மது போதையில்வாலிபருக்கு வெட்டு

மறைமலை நகர்:மறைமலைநகர் அடுத்த, காட்டாங்கொளத்துார் காந்திநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் பிரவீன்குமார், 23.
பொத்தேரி பகுதியைச் சேர்ந்த தன் நண்பர்கள் ஐந்து பேருடன், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் பின்புறம், வனப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.அப்போது, நண்பர்களுக்குள் சண்டை ஏற்பட்டதில் பிரவீன்குமார் தலையில், கத்தியால் தாக்கிவிட்டு, அனைவரும் தப்பி சென்றுள்ளனர்.
பலத்த காயத்துடன் இருந்தவரை, அவ்வழியாக சென்றோர் மீட்டு, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement