உடன்குடி மின் நிலைய கட்டுமான பணி பாதிப்பு
சென்னை:ஜல்லி கற்கள் கிடைக்காததால், உடன்குடி அனல் மின் நிலைய கட்டுமான பணி பாதிக்கப்பட்டுஉள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய அனல் மின்நிலையம் அமைக்கப்படுகிறது.இதன் கட்டுமான பணி, 2017 டிசம்பரில் துவங்கியது. இது தவிர, உடன்குடி மின் நிலையத்தில் நிலக்கரியை கொட்டி வைக்க, கடற்கரையில் இருந்து கடலில், 8 கி.மீ., நிலக்கரி முனையம் அமைக்கப்படுகிறது.
60 சதவீதம்
மொத்தம், 13 ஆயிரத்து, 76 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும், உடன்குடி மின் நிலையத்தின் கட்டுமான பணியை, மத்திய அரசின், 'பெல்' நிறுவனமும்; நிலக்கரி முனைய பணியை, தனியார் நிறுவனமும் மேற்கொள்கின்றன.உடன்குடி மின் நிலையத்தில், 2021 ஜூனில் மின் உற்பத்தி துவக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
இதுவரை, 60 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. எனவே, கட்டுமான பணிகளை முடுக்கி விட்டு, 2022 - 23ல் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது, ஜல்லி கற்கள் கிடைக்காததால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:உடன்குடி மின் திட்ட பணிக்கு தேவையான ஜல்லி கற்கள், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் இருந்து பெறப்படுகின்றன. திருநெல்வேலியில் தனியார் நடத்தி வந்த ஒரு கல் குவாரியில், மே மாதம் நடந்த விபத்தில் சிலர் உயிரிழந்தனர்.
வலியுறுத்தல்
இந்த சம்பவத்தால், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து குவாரிகளிலும் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக, அரசு துறையினர் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஜல்லி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.எனவே, சிறப்பு பிரிவின் கீழ், குவாரிகளில் இருந்து ஜல்லி கற்கள் வழங்குவதை அனுமதிக்குமாறு, இரு மாவட்ட கலெக்டர்களிடமும், மின் வாரிய பொறியாளர்கள் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!