ADVERTISEMENT
அச்சிறுப்பாக்கம்:பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், நெடுங்கல் ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயில்கின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஓடுகள் வேயப்பட்ட கட்டடம் என்பதால், சேதமடைந்து உள்ளது.தவிர, கட்டடத்தின் அருகிலேயே, ஆபத்தை விளைவிக்கும் வகையில் மரம் ஒன்று உள்ளது.
வரும் பருவ மழைக்கு புயல் காற்று வேகமாக வீசினால் மரம் முறிந்து, அங்கன்வாடி மையம் மீது விழும் அபாயம் உள்ளது.எனவே, ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள மரத்தை அப்புறப்படுத்தவும், அதே பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டித் தரவும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!