Load Image
dinamalar telegram
Advertisement

ரசாயன உரங்களுக்கு மாற்றாக உயிர் உரங்கள்

சென்னை:ரசாயன உரங்களுக்கு மாற்றாக, குறைந்த விலையில் கிடைக்கும் உயிர் உரங்களை பயன்படுத்த, விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
வேளாண் துறை அறிவிப்பு:ரசாயன உரங்கள் விலை உயர்வால், சாகுபடி செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, உயிர் உரங்களின் பங்கு முக்கியமானது. உயிர் உரங்கள் பயிர் வாரியாக தயாரிக்கப்படுகின்றன. நெல், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் என அனைத்து பயிர்களின் தன்மைக்கு ஏற்ப 'அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா' என, பல வகையான உயிர் உரங்கள் பயன்பாட்டில் உள்ளன.
உயிர் உரங்களை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்க, 22 உயிர் உர உற்பத்தி மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் எட்டு வகையான உயிர் உரங்கள், திரவ வடிவில் ஆண்டிற்கு 12 லட்சம் லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
உயிர் உரங்களின் விலை, ரசாயன உரங்களின் விலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. விவசாயிகளுக்கு தேவையான உயிர் உரங்கள், போதுமான அளவில் இருப்பு உள்ளன. எனவே, வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் உள்ளிட்ட விதைகள் வாங்கும்போது, தவறாது உயிர் உரங்களை சேர்த்து வாங்கி, விவசாயிகள் பயனடைய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement