பன்னீர்செல்வம் டில்லி பயணம்
சென்னை:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களுடன், நேற்று டில்லி புறப்பட்டு சென்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, இன்று மனு தாக்கல் செய்ய உள்ளார். இதில் பங்கேற்க வரும்படி பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரை சந்தித்து, பா.ஜ., நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். அதையேற்று, பன்னீர்செல்வம் டில்லி புறப்பட்டுச் சென்றார்.
அவருடன், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்றனர்.மேலும், உட்கட்சி பிரச்னை தொடர்பாக அவர்கள், தேர்தல் கமிஷனர்களை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பழனிசாமி தரப்பில், எம்.பி., தம்பிதுரை டில்லி சென்றுள்ளார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!