ஒற்றை தலைமை தீர்மானத்துக்கு வந்த முட்டுக்கட்டைநீதிபதி வீட்டில் அதிகாலை வரை நடந்த விசாரணை
சென்னை:'அ.தி.மு.க., பொதுக்குழுவில், வரைவு தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த பொருள் குறித்தும் விவாதிக்கலாம்; ஆனால், முடிவெடுக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவால், ஒற்றை தலைமை குறித்த, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் தரப்பு கனவு, நனவாகாமல் போனது.அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கவும், விதிகளில் திருத்தம் மேற்கொள்ள தடை விதிக்கவும் கோரி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதேபோல, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்ட சிலரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.அமனுக்களை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டார். இரவு 9:00 மணியளவில், இந்த உத்தரவு வெளியானது. ஒற்றை தலைமைக்காக விதிகளில் திருத்தம் மேற்கொள்ள, எந்த தடையும் இல்லை என்பதால், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பு மகிழ்ச்சியில் மிதந்தது.
இந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யும் நடவடிக்கையில், மனுதாரர்களில் ஒருவரான சண்முகம் தரப்பு இறங்கியது. உடனடியாக, தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு, மனுவை விசாரிக்க கோரினர்.அதைத் தொடர்ந்து, மூத்த நீதிபதி துரைசாமியை அணுக, தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.
மேல்முறையீட்டு மனு உடனடியாக தயார் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமியின் இல்லத்தில், விசாரணை துவங்க ஏற்பாடு நடந்தது. நீதிபதி சுந்தர் மோகனும், அண்ணாநகர் இல்லத்துக்கு வந்தார்.இரவு 2:45 மணிக்கு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை துவங்கியது.சண்முகம் சார்பில், வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம்; ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சார்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன்; இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் வாதாடினர்.
வழக்கறிஞர்களின் வாதம் இரண்டு மணி நேரம் நடந்தது.அதிகாலை 4:40 மணிக்கு வழக்கறிஞர்களின் வாதம் முடிந்தது. இதையடுத்து, ஐந்து நிமிடங்களில், உத்தரவின் சாராம்சத்தை நீதிபதிகள் தெரிவித்தனர்.'பொதுக்குழுவில் 23 வரைவு தீர்மானங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கலாம்; அதுதவிர்த்து, வேறு எந்த முடிவும் எடுக்கக் கூடாது; வேறு எந்த பொருள் குறித்தும் விவாதிக்கலாம்;
ஆனால், அதுகுறித்து முடிவு எதுவும் எடுக்கக் கூடாது' என்ற அதிரடி உத்தரவை, நீதிபதிகள் பிறப்பித்தனர்.அஇந்த உத்தரவால், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியின் உச்சகட்டத்துக்கு சென்றனர். வழக்கறிஞர்கள் திருமாறன்; ஆர்.வி.பாபு; பிரகாஷ்; ராஜலட்சுமி; நாகேந்திரன் உள்ளிட்ட பன்னீர்செல்வம் ஆதரவு வழக்கறிஞர்களும்; முன்னாள் எம்.எல்.ஏ.,வும், வழக்கறிஞருமான இன்பதுரை, வழக்கறிஞர் பாலமுருகன் உள்ளிட்ட பழனிசாமி ஆதரவு வழக்கறிஞர்களும், நீதிபதி வீட்டில் குவிந்திருந்தனர்.நேற்றுமுன்தினம் காலையில், உயர் நீதிமன்றத்தில் துவங்கிய பரபரப்பு, அடுத்தடுத்த திருப்பங்களுடன், நேற்று அதிகாலை 4:45 மணிக்கு முடிந்தது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!