புகார் பெட்டி...: செங்கல்பட்டு
செங்கல்பட்டில் இருந்து, சுற்றுப்புற கிராம மற்றும் நகர் பகுதிகளுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகளில் தினம், சிறுவர் முதல் முதியவர் வரை, ஏராளமான பொதுமக்கள் பயணிக்கின்றனர்.இவர்களுக்கு, காலை, மாலை நேரத்தில், போதிய பேருந்து வசதி இல்லாததால், படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர்.அதேபோல் சில மாணவர்கள், பேருந்து காலியாக இருந்தாலும், படியில் தொங்கி செல்வதையே விரும்புகின்றனர். இதனால், மாணவர்களுக்கு விபத்து அபாயம் உள்ளது.எனவே, அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை, போலீசார் கட்டுப்படுத்த வேண்டும்; கூடுதல் பேருந்து சேவையை ஏற்படுத்த வேண்டும்.
- வி.பழனி, செங்கல்பட்டு
கிழக்கு கடற்கரை சாலை குப்பை மயமாக மாறுது!
கோவளம் - மாமல்லபுரம், கடலோர பகுதியில் வடநெம்மேலி, நெம்மேலி, பட்டிபுலம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இப்பகுதிகளில் உள்ள தனியார் கடற்கரை விடுதிகளின் குப்பை, மூட்டையாக கட்டி, கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டப்படுகின்றன. பல இடங்களில், குப்பை குவியல் காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு, துர்நாற்றம் ஏற்படுகிறது. ஆங்காங்கே குப்பை வீசுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.ராஜ்குமார், சென்னை.
புதர் மண்டி காணப்படும் பயணியர் நிழற்குடை
மதுராந்தகம் அடுத்த கிழாமூர் ஊராட்சி பேருந்து நிறுத்தம், மதுராந்தகம் -- எல்.எண்டத்துார் சாலையோரம் உள்ளது.இங்குள்ள நிழற்குடையை பயன்படுத்தி, எல்.எண்டத்துார், கிளியாநகர், உத்திரமேரூர், மதுராந்தகம் போன்ற பகுதிகளுக்கு மக்களுக்கு சென்று வந்தனர்.இருக்கைகள் இல்லாததால், பயணியர் நின்று செல்லும் நிலை உள்ளது. தவிர, புதர் மண்டி மோசமான நிலையில் இருப்பதால், நிழற்குடையை பயன்படுத்த முடியாமல், பொதுமக்கள் மற்றும் மாணவ- - மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். நிழற்குடையை சீரமைக்க, ஒன்றிய நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.கோபி, பெரும்பாக்கம், அச்சிறுப்பாக்கம்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!