பொதுக்குழு துளிகள்...
*பொதுக்குழு நடந்த மண்டபத்திற்குள் காலை 8:00 மணிக்கு முன்பே, உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டனர். பழனிசாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை கோஷத்தை எழுப்பியபடி, அவர்கள் மண்டபத்திற்குள் அமர்ந்திருந்தனர்
*ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தன் பிரசார வாகனத்திலும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தன் காரிலும், பொதுக்குழு நடந்த மண்டபத்திற்கு வந்தனர். பழனிசாமிக்கு மட்டுமே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பன்னீர்செல்வத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.
பன்னீர்செல்வம் வந்தபோது, பலர் எழுந்து எதிர் கோஷம் போட்டனர். அவர்களை, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, வைகைச்செல்வன் ஆகியோர் அமைதி காக்கும்படி கூறினர்
* மதிய விருந்தில், ஜாங்கிரி, பாதாம் கீர், சாதம், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், தயிர் சாதம், வெஜிடபிள் புலாவ், தயிர் பச்சடி, அவியல், பொரியல், ஊறுகாய், அப்பளம், மோர் மிளகாய், காலிபிளவர் பக்கோடா, மசால் வடை, வாழைப்பழம் ஆகியவை பரிமாறப்பட்டன.
காலையில் இட்லி, பொங்கல், வடை, சாம்பார், சட்னி, கேசரி ஆகியவை அடங்கிய 'மினி டிபன் பார்சல்' வழங்கப்பட்டன
* பொதுக்குழு துவங்குவதற்கு முன், சம்பிரதாயத்திற்கு செயற்குழுக் கூட்டம் நடப்பது வழக்கம். இதற்காக, தனி அறையில் செயற்குழு உறுப்பினர்கள் காத்திருந்தனர். ஆனால், செயற்குழுக் கூட்டம் நேற்று ஒப்புக்கு கூட நடக்கவில்லை.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!