தென்னையில் வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த அதிகாரி அறிவுரை
செங்கல்பட்டு:தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்பத்தும் வழிமுறைகள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சுரேஷ் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், 5685 ஏக்கர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, தென்னையில் 'ரூகோஸ்' எனும் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.தென்னையில் தொழில்நுட்ப முறைகளை கடைப்பிடித்து, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும்.
தெளிப்பான்கள் மூலம், இலையின் அடிப்புறத்தில் தண்ணீரை வேகமாக பீய்ச்சியடித்து, கூட்டமாக காணப்படும் வெள்ளை ஈக்களை அழிக்க வேண்டும்.இயற்கையிலேயே காணப்படும், 'என்கார்சியா' ஒட்டுண்ணி கூட்டுப்புழுக்களை கண்டறிய வேண்டும்.ஒரு ஏக்கருக்கு, 40 என்கார்சியா கூட்டுப்புழுக்களை, வெள்ளை ஈக்கள் காணப்படும் தென்னை மரங்களில் பரவலாக விட வேண்டும்.'கிரைசோ பெர்லா' எனும் இரை விழுங்கி உயிரினத்தை, ஒரு ஏக்கருக்கு 400 எண்ணிக்கை வீதம் வெளியிட வேண்டும்.இந்த உயிரினம், 1,000 எண்ணிக்கையில் 300 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதை வாங்கி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, கண்டிப்பாக எவ்விதமான ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளையும் தெளிக்கக்கூடாது.தாக்குதல் மிக அதிகமாக இருந்தால், 'அசாரடிராக்ட்டின்' மற்றும் வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லிகளை தெளித்து கட்டுப்படுத்தலாம். கூடுதல் விபரங்களுக்கு, தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையங்களை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!