Load Image
dinamalar telegram
Advertisement

ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் திறக்கப்படுமா? காட்டாங்கொளத்தூர் விவசாயிகள் எதிர்பார்ப்பு

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்ட, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தை திறக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்
.காட்டாங்கொளத்துார் வட்டார வேளாண் துறைக்கு உட்பட்டு கருநிலம், கொளத்துார், பாலுார், ஆத்துார் உட்பட 39 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் 2,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது.தோட்டக்கலை பயிர்களான காய்கறி, பூ வகைகளும், குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடப்படுகின்றன.விவசாயிகள், வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்களை வாங்க, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்ட, வேளாண்மை அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.அந்த கட்டடங்கள் சேதமடைந்து காணப்பட்டதால், அவை இடிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் கட்ட முடிவானது.தற்காலிகமாக, வேளாண் துறை அலுவலகம் அருகில் உள்ள காமராஜர் தெருவில் வாடகை கட்டடத்தில், வேளாண் அலுவலகம் இயங்கி வருகிறது.
அதேபோல், செங்கல்பட்டு அருகில் உள்ள ஆத்துார் கிராமத்தில், தோட்டக்கலைத் துறை அலுவலகம் இயங்கி வருகிறது.இந்நிலையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 2 கோடி ரூபாயில் வேளாண், தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை என, அனைத்து விவசாய துறைகளுக்கும் ஒரே வளாகத்தில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
அதில் 6,028 சதுர அடியில் அனைத்து துறை அதிகாரிகளுக்கு அறைகள், விவசாயிகளுக்கு பயிற்சி கூடம், 100 பேர் பங்கேற்கும் வகையில் கூட்ட அரங்கம் மற்றும் 2,153 சதுர அடியில் சேமிப்பு கிடங்கு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் கடந்த மாதம் முடிவடைந்து, கட்டடம் தயார் நிலையில் உள்ளது.பெயர் வெளியிட விரும்பாத வேளாண் பொறியியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசின் திட்டங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில், வேளாண் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் ஒரே கட்டடத்தில் ஒருங்கிணைத்து, வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக விவசாயிகளுக்கு நேர விரயம், அலைச்சல் ஏதுமின்றி திட்டங்களை பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த கட்டடத்தை விரைவாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement