ரத்தினவேலு சுப்ரமணியம் பள்ளி பொதுத்தேர்வு முடிவுகளில் சாதனை
மண்ணடி, மண்ணடி, டாக்டர் ரத்தினவேலு சுப்ரமணியம் முத்தியாலுப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சென்னை, மண்ணடி லிங்கி செட்டி தெருவில், டாக்டர் ரத்தினவேலு சுப்ரமணியம் முத்தியாலுப்பேட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.கடந்த கல்வியாண்டில் நடந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், இப்பள்ளியில் படித்து தேர்வெழுதிய நுாறு சதவீதம் மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, பிளஸ் 2 தேர்வில், சாஜிதா, 591 மதிப்பெண் பெற்று முதலிடம்; கலைவாணி, 590 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம்; முத்துலட்சுமி, 574 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்று, பள்ளி அளவில் சாதனை படைத்துள்ளனர். தேர்வெழுதிய, 83 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.வணிக கணிதம், கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களில் தலா மூன்று மாணவியரும்; வேதியியலில் இருவர், வணிகவியல், பொருளியல், கணினி அறிவியலில் தலா ஒருவர் என, 11 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதே போல், 10ம் வகுப்பில், ஹரிப்பிரியா, 500 மதிப்பெண்களுக்கு, 487 மதிப்பெண் பெற்று முதலிடமும், கீர்த்திகா, 478 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், அஸ்வினி, 474 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் என, தேர்வெழுதிய, 74 மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.இப்பள்ளி, மாணவியர், 12 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்து வருகின்றனர். பொதுத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி நிர்வாக குழு தலைவர் வேணுகோபாலா, செயலர் ராம்குமார் மற்றும் நிர்வாக குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!