Load Image
dinamalar telegram
Advertisement

வீராங்கால் ஓடைசீரமைப்பு பணி துவக்கம்

ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம் ஏரி கலங்கலில் இருந்து புழுதிவாக்கம் வரை வீராங்கால் ஓடை, 13.90 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணி நேற்று துவங்கியது.சென்னை, ஆதம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் வீராங்கால் ஓடையில் கலங்கலில் இருந்து ஆதம்பாக்கம் வரை ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளது. இதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், வீராங்கால் ஓடை புனரமைப்பு பணி பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது. தொகுதி எம்.எல்.ஏ.,வும், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சருமான அன்பரசன், வீராங்கால் ஓடை பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது:வீராங்கால் ஓடை ஆக்கிரமிப்பை அகற்றி, விரிவாக்கம் செய்து மதில் சுவர் எழுப்ப வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.இதை நிவர்த்தி செய்யும் வகையில், வீராங்கால் ஓடை வாணுவம் பேட்டையில் இருந்து சதுப்பு நிலம் வரை, 3,200 மீட்டர் நீளம் உடையது. அதில் ஏற்கனவே, 2,000 மீட்டர் ஓடை சீரமைக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள, 1,200 மீட்டர், 13.90 கோடி ரூபாயில் சீரமைப்பு பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த ஓடை இடத்திற்கு ஏற்றவாறு, 5 மீட்டரில் இருந்து, 14 மீட்டர் அகலம் வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. தரை மட்டத்தில் இருந்து, 4 மீட்டர் உயரத்திற்கு இருபுறமும் சுவர் எழுப்பப்படுகிறது.ஆதம்பாக்கம் ஏரியில், 8 கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தது. கடந்த ஆட்சியில் ஏரி இடத்திற்கு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.அவ்வாறு பட்டா பெற்றவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளதால், அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவில் நீதிமன்ற உத்தரவு பெற்று பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு கூறினார்.இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் சந்திரன், மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன், வார்டு கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத், பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படம் உண்டு
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement