நெமிலிச்சேரி அருகேதீக்கிரையான வாகனம்
திருநின்றவூர், நெமிலிச்சேரி அருகே சாலை நடுவே, டாடா மேஜிக் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார், 28; டாடா மேஜிக் வாகன ஓட்டுனர்.நேற்று மதியம், சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை வழியாக ஐந்து பயணியரை ஏற்றி, காஞ்சிபுரம் செல்ல, ஆவடியில் இருந்து புறப்பட்டார்.மதியம் 1:00 அளவில் பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி ஜெயா கல்லுாரி அருகே செல்லும்போது, வாகனத்தில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. உடனே வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி, பயணியர் அனைவரையும் விஜயகுமார் இறக்கிவிட்டார். சில நிமிடங்களில் வாகனம் தீப்பிடித்து எரிய துவங்கியது.அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்' ஊழியர்கள், தீ அணைப்பானை பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர்.தகவலறிந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி தீயை அணைப்பதற்குள் வாகனம் தீக்கிரையானது. விபத்து குறித்து, திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!