Load Image
dinamalar telegram
Advertisement

மன அழுத்தம் குறைக்க போலீசாருக்கு சிறப்பு வகுப்பு

Tamil News
ADVERTISEMENT
போக்குவரத்து போலீசாருக்கு, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், மன அழுத்தத்தை குறைக்கவும், முதலுதவி சிகிச்சை வழங்கவும், சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய காவல் ஆணையரகங்களில், மொத்தம் 59 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன.


இவற்றில், 56 ஆய்வாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான போலீசார் பணிபுரிகின்றனர்.அவ்வாறு பணிபுரியும் போக்குவரத்து போலீசார் சிலர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருவாக புகார் எழுந்தது. அவர்களுக்கு, 'அலர்ட்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வாயிலாக, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த கமிஷனர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து, போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது:சென்னை போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் அனைவருக்கும், முதலுதவி சிகிச்சை மற்றும் மன அழுத்தத்தை போக்க சிறப்பு பயிற்சி வகுப்பு, வரும் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளது.முதற்கட்டமாக, வட சென்னையில் உள்ள போக்குவரத்து பிரிவு போலீசார் அனைவருக்கும், வண்ணாரப் பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில், பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. இதை தொடர்ந்து, கிழக்கு, தெற்கு பகுதியில் பணிபுரியும் போலீசாருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

- நமது நிருபர் --
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement