தேனி அம்மன் கோவில் தேரோட்டம் விமரிசை
அச்சிறுப்பாக்கம்:தேன்பாக்கம் கிராம தேனி அம்மன் கோவில் தேரோட்டம், நேற்று விமரிசையாக நடந்தது.அச்சிறுப்பாக்கம் அருகே, தேன்பாக்கம் கிராமத்தில் கிராம தேவதையான தேனி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் தேர் திருவிழா, கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக, இரு ஆண்டுகளாக நடக்கவில்லை.
இந்நிலையில், இந்தாண்டு தேனி அம்மன் கோவில் விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, கிராமத்தில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து, கோவில் வாசலில் ஊரணி பொங்கல் வைத்தனர்.இரவு 10:00 மணிக்கு, கேரள செண்டை மேளங்கள் முழங்க, தேனி அம்மன் தேரில் எழுந்தருளி, தெருக்களில் பவனி வந்தார். கிராம வீதிகளில் வந்த அம்மனை, பக்தர்கள் தரிசித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை, கிராம மக்கள் மற்றும் கோவில் உபயதாரர்கள் செய்தனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!