இவங்க தான் நம்மை அழிக்க போறாங்களாம்!
சென்னை:''தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கின்றனரே தவிர, தி.மு.க., அழிந்ததாக வரலாறு கிடையாது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேத்தி தீப்தி - விஷ்வக்சேனா திருமணம், சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை வகித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:இவ்வளவு பெரிய மண்டபத்தில், நம் வீட்டுத் திருமணம் நடப்பதைப் போல எண்ணி, நாமெல்லாம் பங்கேற்று, மணமக்களை வாழ்த்துகிறோம்.இன்னொரு பக்கத்தில், திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அந்தப் பிரச்னைக்கு போக விரும்பவில்லை. அதில் நாம் தலைமையிட வேண்டிய அவசியமே இல்லை, ஆனால், அவர்கள் தான் நம்மை அழிக்க முடிவு செய்திருக்கின்றனராம்.
தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கின்றனரே தவிர, தி.மு.க., அழிந்ததாக வரலாறு கிடையாது. எனவே, அந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்.நான் கொஞ்சம் உடல் நலிவுற்று ஓய்வில் இருந்தாலும், இந்த திருமணத்திற்கு எப்படியும் வர வேண்டும் என்று வந்திருக்கிறேன். அதனால் தான் பெருந்தன்மையோடு எல்லாரும் 'நாங்கள் எல்லாம் பேசவில்லை. நீங்கள் மட்டும் பேசி முடித்து கொள்ளலாம்' என்றனர்.
நான் இதை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் காண வேண்டிய பணிகள், எனக்கு உள்ளன. அதுபற்றி, கோட்டையில் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளேன்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!