வேலுார் கலெக்டர் பேச்சு: சவர தொழிலாளர்கள் அதிருப்தி
திருப்போரூர்:'பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு தலைமுடியை சரியாக வெட்டாத சலுான் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, வேலுார் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விடுத்த எச்சரிக்கைக்கு, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்க, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்ட செயலர் ருக்மாங்கதன், தலைவர் சண்முகம் ஆகியோர் கூறியதாவது:வேலுார் மாவட்ட பள்ளிகளில், கலெக்டர் குமாரவேல் ஆய்வு செய்தபோது, 'சீருடை, சிகை அலங்காரம் ஆகியவற்றை ஒரே மாதிரியாக அணிந்து வர வேண்டும்.
'மாணவர்களுக்கு தலைமுடியை சீராக வெட்டாத சலுான் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும்' எனக் கூறியுள்ளார். அனைத்து மாவட்டங்களிலும், இவ்வாறு அறிவுறுத்த வாய்ப்புள்ளது.
முடி திருத்தும் தொழிலாளர்கள் பெரும்பாலும், சிறிய முதலீட்டில் தொழில் செய்வோர். சிறுவர்கள் முதல் முதியோர் வரை, அவர்களின் விருப்பத்தின்படியே முடி திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.பள்ளி மாணவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய மறுத்தால், அவர்கள் வேறு கடையை நாடிச் செல்லக்கூடும். இதனால், தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
குறிப்பாக மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்து கொள்வதில் நாங்கள் உத்தரவிட முடியாது. கலெக்டர் கூறியது, அனைத்து முடி திருத்தும் தொழிலாளர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!