Load Image
dinamalar telegram
Advertisement

கல்லுாரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா

சென்னை, இந்துஸ்தான் கல்லுாரியில், இன்று முதல் விளையாட்டு ஒதுக்கீடு தேர்வு போட்டிகள் துவங்குகின்றன.விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு வீரர் - வீராங்கனையரை தேர்வு செய்து, 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' அடிப்படையில், சென்னை படூரில் உள்ள இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் சேர்க்கை வழங்கப்படுகிறது.அதன்படி, இந்தாண்டுக்கான வீரர் - வீராங்கனையர் தேர்வு இன்று துவங்கி 26ம் தேதி வரை கல்லுாரி வளாகத்தில் நடக்கஉள்ளது. இன்று தடகளம், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், பாக்சிங், வில்வித்தை உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான தேர்வு நடக்கிறது.நாளை, கால்பந்து, பால் பேட்மின்டன், செஸ், ஜிம்னாஸ்டிக், கபடி மற்றும் குதிரை சவாரி தேர்வு தொடந்து, மற்ற விளையாட்டுகளுக்கு நாளை மறுநாளும் தேர்வுகள் நடக்கின்றன.பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர் கல்வி மற்றும் விளையாட்டு அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக பங்கேற்கலாம் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement