Load Image
dinamalar telegram
Advertisement

பிரணவமலையில் எரியாத மின் விளக்குகள் இரவில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சம்

திருப்போரூர்:திருப்போரூர் பிரணவமலையில் மின் விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் நடந்து செல்லும் பக்தர்கள், மக்கள் அவதியடைகின்றனர்.
திருப்போரூரில் கந்தசுவாமி கோவிலை ஒட்டி பிரணவமலை உள்ளது. இந்த மலையின் மீது பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது.மலைக்கோவிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜையும், மாதத்தில் பிரதோஷ வழிபாடும் நடத்தப்படுகிறது. இந்நாட்களில் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் வருகின்றனர்.
மலையடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் உச்சி வரை, மின் கம்பங்கள் அமைத்து, விளக்குகள் பொருத்தப்பட்டன. நாளடைவில் மின் விளக்குகள் பழுதடைந்து எரிவதில்லை. இதனால் மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், அச்சத்துடனே வந்து செல்கின்றனர். பிரணவமலைக்கு பின்புறம் எம்.ஜி.ஆர்., நகர், குமரன் நகர் ஆகிய குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் அப்பகுதி மக்கள், மலைப்படிகட்டுகளில் ஏறி இறங்கி, தங்கள் வீடுகளுக்கு செல்வர். அவர்களும் அச்சத்துடன் செல்கின்றனர்.எனவே, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம், பழுதடைந்துள்ள மின் விளக்குகளை அகற்றி, புதிய மின் விளக்குகளை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement