Load Image
dinamalar telegram
Advertisement

சுவரில் சிக்கியமான் மீட்பு

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், சுவர் இடைவெளியில் சிக்கிய மானை, தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில், தணிகைமணி என்பவரின் மாந்தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, தோப்பின் சுற்றுச்சுவரில் இருந்த குறுகிய சந்தில் ஆண்மான் சிக்கியது.வெளியேற இயலாமல் மான் தவிப்பது குறித்து, மாமல்லபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த வீரர்கள், சுவற்றை, குறிப்பிட்ட அளவில் துளையிட்டு, ஒரு மணி நேரம் போராடி, சிறிய காயத்துடன் 40 கிலோ எடையுள்ள மானை மீட்டனர்.'திருப்போரூர் பகுதி வனத்திலிருந்து, வழித்தவறி வந்திருக்கலாம்' என வனத்துறையினர் கூறினர்
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement