Load Image
dinamalar telegram
Advertisement

அந்த கால அ.தி.மு.க., வேறு! கூறுகிறார் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை:''எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாகாலத்தில் இருந்த அ.தி.மு.க.,வேறு; தற்போது உள்ள அ.தி.மு.க., வேறு,'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அ.தி.மு.க.,வினர் கேட்டதால் மட்டுமே, போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சட்டம் தன் கடமையை செய்யும்.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாகாலத்தில் இருந்த அ.தி.மு.க., வேறு; தற்போது உள்ள அ.தி.மு.க., வேறு. இதற்கும், அதற்கும் சம்பந்தமே கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.இவர், நீண்ட காலமாக அ.தி.மு.க.,வில் இருந்து, ஜெ., அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன், தி.மு.க.,வில் இணைந்தவர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement