ADVERTISEMENT
2021 - 22ல் இந்திய சி.இ.ஓ.,க்களுக்கு சராசரியாக ரூ.11.2 கோடி சம்பளம் பெற்றுள்ளனர். நடுத்தர அளவில் ரூ.7.4 கோடி சம்பளம் பெற்றுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் இது சி.இ.ஓ.,க்கள் பெற்ற அதிகபட்ச சம்பளம் என தெரியவந்துள்ளது.
டெலாய்ட் நிறுவனம் இந்திய சி.இ.ஓ.,க்களின் சம்பளம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019ல் சி.இ.ஓ.,க்களின் இந்த சராசரி அளவு ரூ.9.8 கோடி ஆகவும் நடுத்தர அளவு சம்பளம், ரூ.6.9 கோடி என இருந்தது. 2020ல் சராசரி சம்பளம் ரூ. 9.4 கோடியாகவும், நடுத்தர சம்பளம் ரூ. 6.4 கோடி என்ற அளவிலும் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பள சராசரியானது சொந்த நிறுவன சி.இ.ஓக்கள் மற்றும் தொழில்முறை சி.இ.ஓ.,க்கள் ஆகிய இரு வகையினரின் சம்பளத்தையும் உள்ளடக்கியது. இதில் நீண்ட கால ஊக்கத்தொகைகளும் கணக்கில் வரும்.
2021 - 22ல் தொழில்முறை சி.இ.ஓ.,க்களின் சராசரி சம்பளம் ரூ.10 கோடியாக இருக்கிறது. சி.இ.ஓ.,க்களிடையே நடுத்தர அளவிலான சம்பளம் ரூ. 7.4 கோடி ஆக உள்ளது. ஐ.டி., துறை சேவைத் துறை, உற்பத்தித் துறை, நுகர்வோர் பொருட்கள், மருந்து மற்றும் நிதிச் சேவைகள் ஆகிய துறைகளில் 470க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சர்வேயின் படி இந்த சராசரியை மதிப்பிட்டுள்ளனர்.
இந்திய சி.இ.ஒ.,க்களின் சம்பளம் தலைமை நிதி அதிகாரிகள் எனப்படும் சி.எப்.ஓ.,க்களின் சம்பளத்தை விட 2.7 மடங்கு அதிகம். தொழில் பிரிவு தலைவர்களை விட 3.7 மடங்கு அதிகம். தலைமை மனித வள அதிகாரிகள் மற்றும் விற்பனை பிரிவு தலைவர்களை விட 4 மடங்கு அதிகம். சி.ஓ.ஓ., எனும் தலைமை இயக்கக அதிகாரியை விட 2.4 மடங்கு அதிகம் என டெலாய்ட் நிறுவன சர்வேயில் குறிப்பிட்டுள்ளனர்.
தலைமை நிர்வாக அதிகாரிகளின் குறுகிய கால ஊக்கத்தொகைகளில் சுமார் 80 சதவீதம் நிறுவனத்தின் செயல்திறனைச் சார்ந்து வழங்கப்படுகிறது. இதனை இலக்கு அடிப்படையிலான அணுகுமுறை மூலம் நிர்ணயிக்கின்றனர். அதே போல் நீண்டகால ஊக்கத்தொகையாக நிறுவன பங்குகளை சி.இ.ஓ.,க்கள் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். சுமார் 54 சதவீத நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துகின்றன. தற்போது 16 சதவீதம் சி.இ.ஓ.,க்கள் இதைப் பயன்படுத்துகின்றனர் என சர்வேயில் தெரிய வந்துள்ளது.
டெலாய்ட் நிறுவனம் இந்திய சி.இ.ஓ.,க்களின் சம்பளம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2019ல் சி.இ.ஓ.,க்களின் இந்த சராசரி அளவு ரூ.9.8 கோடி ஆகவும் நடுத்தர அளவு சம்பளம், ரூ.6.9 கோடி என இருந்தது. 2020ல் சராசரி சம்பளம் ரூ. 9.4 கோடியாகவும், நடுத்தர சம்பளம் ரூ. 6.4 கோடி என்ற அளவிலும் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பள சராசரியானது சொந்த நிறுவன சி.இ.ஓக்கள் மற்றும் தொழில்முறை சி.இ.ஓ.,க்கள் ஆகிய இரு வகையினரின் சம்பளத்தையும் உள்ளடக்கியது. இதில் நீண்ட கால ஊக்கத்தொகைகளும் கணக்கில் வரும்.

இந்திய சி.இ.ஒ.,க்களின் சம்பளம் தலைமை நிதி அதிகாரிகள் எனப்படும் சி.எப்.ஓ.,க்களின் சம்பளத்தை விட 2.7 மடங்கு அதிகம். தொழில் பிரிவு தலைவர்களை விட 3.7 மடங்கு அதிகம். தலைமை மனித வள அதிகாரிகள் மற்றும் விற்பனை பிரிவு தலைவர்களை விட 4 மடங்கு அதிகம். சி.ஓ.ஓ., எனும் தலைமை இயக்கக அதிகாரியை விட 2.4 மடங்கு அதிகம் என டெலாய்ட் நிறுவன சர்வேயில் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் 30 முதல் 33 சதம் வரியில் போய்விடும் என்பதை நினைவில் கொள்க.