Load Image
dinamalar telegram
Advertisement

அமைச்சர்களை பதவி நீக்க கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி-கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிரா மற்றும் புதுடில்லி அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க உத்தரவிடக்கோரிய மனு, தலைமை நீதிபதி விசாரணைக்குப் பின் பட்டியலிடப்படும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Latest Tamil News

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தேசியவாத காங்.,கைச் சேர்ந்த மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக், பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் புதுடில்லியில், சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினும், பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.


இந்நிலையில், அமைச்சர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு இருந்தால், அவர்களது பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. இதைக் குறிப்பிட்ட வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், 'நவாப் மாலிக் மற்றும் சத்யேந்திர ஜெயினின் பதவிகளை பறிக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Latest Tamil News
இதை அவசர வழக்காக விசாரிக்க, நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார், சுதான்ஷு துலியா அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் நேற்று கோரப்பட்டது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இதுபோன்ற மனுக்களை முதலில் பதிவாளரிடம் முறையிட வேண்டும். அவர்கள் விசாரணைக்கு பட்டியலிடவில்லை என்றால் மட்டுமே அமர்வை நாட வேண்டும்.


இந்த மனுவை தலைமை நீதிபதி தான் முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின், வேறு அமர்வுகளுக்கு மாற்றப்படும். அனேகமாக அடுத்த வாரத்தில் பட்டியலிடப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (2)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஹிஹிஹி... பணப்பறிமாற்ற வழக்கு என்றால் தமிழகத்தில் கட்சி பாரபட்சம் இல்லாமல் அனைத்து திராவிடக்கூட்டத்திலும் பாதித்தலைகள் சிக்கும்...

  • Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ

    அரசு ஊழியர்கள் ஜெயிலுக்கு போனா சஸ்பென்டு பண்ணும் சட்டம் உண்டு ..

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்