Load Image
dinamalar telegram
Advertisement

2 பணியாளர்கள் சஸ்பெண்ட்

சென்னை:நம் நாளிதழ் செய்தியை அடுத்து, செங்கல்பட்டு, வெடால் கிராமத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகள் மழையில் நனைய காரணமாக இருந்த இரு பணியாளர்களை, 'சஸ்பெண்ட்' செய்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே வெடால் கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துள்ளது குறித்தும்; ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம்காத்தான் ஆர்.1 ராம்கோ ரேஷன் கடையில் புழுத்துப் போன பச்சரிசி தொடர்பாகவும் புகைப்படங்கள் வெளியாகின.
இதையடுத்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு மண்டல மேலாளர், ராமநாதபுரம் மாவட்ட வழங்கல் அதிகாரிகளை கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை அனுப்ப உத்தரவிட்டார்.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை வெளியிட்ட செய்தி குறிப்பு:வெடால் நேரடி கொள்முதல் நிலையத்தில் கள ஆய்வு செய்யப்பட்டதில், 300 நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து, சேதமாகும் நிலையில் உள்ளன; அதற்கு மூட்டைகள் அடுக்கும்போது தார்பாய் போடாதது தான் காரணம் என அறியப்பட்டது.கொள்முதல் அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பட்டியல் எழுத்தர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொள்முதல் நிலையத்தில் உள்ள, 2 கோடி கிலோ நெல்லை, அரிசி ஆலைகளுக்கு விரைந்து அனுப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.ரேஷன் கடைகளில், வினியோகம் செய்யப்படாத அரிசி தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில், அவற்றை கிடங்குகளுக்கு அனுப்பவும், தரமான அரிசி மட்டுமே வினியோகம் செய்வதையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நெல் மூட்டைகள் அனைத்தும், மழை நீர் புகாதபடி பாதுகாப்பான நிலையில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அரசு அறிவுறுத்தியபடி, மாவட்ட நிர்வாகம், கூட்டுறவு துணை பதிவாளர்கள், வாணிப கழக மண்டல மேலாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து, நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதுடன், உடனுக்குடன் கிடங்கு, அரிசி ஆலைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement