Load Image
dinamalar telegram
Advertisement

சிவகாசி ஆறு மாதத்தில் துாய்மை நகராக மாற்றப்படும்

சிவகாசி,- -சிவகாசி மாநகராட்சி முழுவதுமே நகர்வலம் வந்து துாய்மை பணிகளை பார்வையிட்டு அசத்தி வருகிறார். பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக சென்று வருகைப் பதிவேடு ஆய்வு செய்வதோடு பணியாளர்களை உற்சாகப்படுத்துகிறார். மேலும் ஒரு மாதமாக இரவில் ஓடைகளை துார்வார நடவடிக்கை எடுத்து வருகிறார். தொடர்ந்து துாய்மை பணிக்காக உழைக்கும் சிவகாசி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தினமலர்நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி.சிவகாசி மாநகராட்சி ஆன பின்னர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா. வளர்ச்சிப் பணிகள் பற்றி...மாநகராட்சி ஆனவுடன் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளது. மேலும் நிதி கேட்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.வரி வசூலில் பிரச்சனைகள்: வரி சீராய்வுக்கு பின்னர், சுய விண்ணப்பப்படிவத்தை மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு வீடு, தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு நேரடியாக சென்று கொடுத்து வருகின்றனர். இதில் வீடு, தொழிற்சாலைகளின் பரப்பளவு, இடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் உள்ளன. அதில் உண்மையான தகவல்களை பூர்த்தி செய்து மாநகராட்சி அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். பெரும்பான்மையானவர்கள் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டனர். விண்ணப்பப் படிவம் கொடுக்காதவர்கள் வீடுகளுக்கு ஊழியர்கள் மறுபடியும் நேரடியாகச் சென்று பூர்த்தி செய்து வாங்குகின்றனர். இதில் தவறான தகவல் இருக்கும் பட்சத்தில் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு வரி நிர்ணயிக்கப்படும்.மாநகராட்சியில் ஆங்காங்கே இன்னமும் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. துாய்மையாக்க எடுக்கும் நடவடிக்கை பற்றி: மாநகராட்சி முழுவதுமே மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட அடங்கிய குழுவினர் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மேலும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படுகின்றது. இதனால் 6 மாதத்திற்குள் மாநகராட்சி முழுவதும் துாய்மையாக்கப்படும்.மாநகராட்சி சுவர்களை அலங்கோலமாக்கும் சுவரொட்டிகள் குறித்து: இதற்காக மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு சுவர்களிலும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் முயற்சியாக மாநகராட்சி அலுவலக சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் பணி நடைபெறுகிறது. தவிர ஒரு சில வீட்டு சுவர்களில் வீட்டு உரிமையாளரின் அனுமதி பெறாமல் சிலர் விளம்பரம் செய்கின்றனர். அந்த வீட்டு உரிமையாளர்கள் எங்களை அணுகும் பட்சத்தில், எங்கள் செலவில் அவர்களின் சுவற்றில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி தரப்படும்.குப்பை அகற்றப்படுவதில் தாமதம் ஏன்: தினமும் காலையில் உடனடியாக குப்பை அகற்றப்படுகின்றது. ஆனால் அடுத்தடுத்து அதே இடத்தில் பொதுமக்கள் மீண்டும் குப்பையை கொட்டி விடுகின்றனர். இதனால் அகற்றப்படாதது போல் தோன்றுகிறது. இனிமேல் அவ்வப்போது உடனடியாக அகற்றப்படும்.பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளதே: இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலான இடங்கள் ஹைமாஸ் விளக்குகள் எரியவில்லை ஏன்: இதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து விளக்குகளும் எரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு குறித்து: பாரபட்சமின்றி அனைத்து இடங்களிலுமே ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் இதுகுறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பஜார் பகுதியில் சுகாதார வளாகம் அமைக்கப்படுமா நடமாடும் டாய்லட் வசதி ஏற்படுத்த உள்ளது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நடமாடும் டாய்லட் கொண்டு வரப்படும்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement