Load Image
dinamalar telegram
Advertisement

சீட்டாட்டம்; 18 பேர் கைது



நகை பறிப்பு: ஒருவர் கைது

நரிக்குடி: நரிக்குடி சொட்டமுறி பஸ் நிறுத்தத்தில் சில தினங்களுக்கு முன் பஸ்சுக்காக காத்திருந்த அங்காளபரமேஸ்வரியிடம் விலாசம் கேட்பது போல் கேட்டு, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்ற சம்பவத்தில் நரிக்குடி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதுதொடர்பாக கமுதி பசும்பொன் நகரைச் சேர்ந்த எட்டுராஜ் மகன் அரவிந்த்குமாரை 19, கைது செய்து விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.சீட்டாட்டம்; 18 பேர் கைதுஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் எஸ்.ஐ. வேலுச்சாமி ராஜபாளையம் ரோட்டில் உள்ள கிளப்பில் சோதனை நடத்தினார். இதில் அரசு அனுமதியின்றி சீட்டு விளையாடிய ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சேகர், 54, ராஜசேகர்,51, ராஜபாளையம் பாண்டிராஜ், 38, உட்பட 18 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 39 ஆயிரத்து 660ஐ பறிமுதல் செய்தார்.கொலை மிரட்டல்ராஜபாளையம்: ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் பால்கண்ணன் 41,டீ கடை நடத்தி வருகிறார். தொழிலுக்காக கனகமணியிடம் ரூ. 3 லட்சம் கடன் பெற்று திருப்பி செலுத்த காலதாமதம் ஏற்பட்டது. வீட்டிலிருந்த பால்கண்ணனை வெளியே இழுத்த கனகமணி செருப்பால் அடித்ததுடன் அவரது நண்பர் செல்வம் கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.மூதாட்டி பலிசாத்துார்: சாத்துார் சிவகாசி ரோட்டில் மனநலம் பாதித்தநிலையில், 65. வயது மூதாட்டி சுற்றி திரிந்தார். ஜூன் 22 இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். சாத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்கள் மாயம்விருதுநகர்: விருதுநகர் சின்னப்பரெட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி 45, இவரது மனைவி வடிவை 45, ஜூன் 25 மாலை 5:30 மணிக்கு வாசல் தெளிக்க சென்ற வரை காணவில்லை. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.* விருதுநகர் பூங்காநகரை சேர்ந்தவர் பாஸ்கரன் 48, இவரது மகள் செல்வக்கனி பொறியியல் பட்டதாரியான இவரை நேற்று முன் தினம் அவர் வேலை பார்க்கும் கடைக்கு காலை 9:300 மணிக்கு அவரது தந்தை கொண்டு விட்டார். மாலையில் கூப்பிட சென்ற போது அவர் கிளம்பி விட்டதாக கடையில் தெரிவித்தனர். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement