போலீஸ் செய்திகள்; வாலிபர் மீது போக்சோ வழக்கு
சிவகங்கை: சிவகங்கை அருகே 15 வயது சிறுமியைகாதலித்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூத்தாண்டத்தை சேர்ந்த சங்கர் மகன் முனீஸ்வரன் 21 மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர்.பத்தாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். மே 31 அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் ரீதியாக முனீஸ்வரன் துன்புறுத்தியதோடு, ஜூன் 1 ம் தேதி சிறுமியை திருப்பூருக்கு கடத்தி சென்றார். போலீசார் விசாரிப்பதை அறிந்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். சிவகங்கை மகளிர் இன்ஸ்பெக்டர் விஜயா, வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தார்.
மஞ்சுவிரட்டு வழக்கு
காரைக்குடி: காரைக்குடி சங்கந்திடலில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தினர். வி.ஏ.ஓ., உதயகுமார் புகாரில் எஸ்.ஐ., தீபா, காரைக்குடி தெற்குதெரு ரவிக்குமார் 32 உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்தார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!