கருத்தரங்கு
சிவகங்கை--சிவகங்கை அரசு மருத்துவமனையில் தடுப்பூசியால் தடுக்க கூடிய நோய்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது.கருத்தரங்கை டீன் ரேவதி துவக்கி வைத்தார். சுகாதார துணை இயக்குனர் ராம்கணேஷ் வரவேற்றார். மருத்துவ துறை சார்பில் கண்காணிப்பாளர் பாலமுருகன், காது மூக்கு தொண்டை துறை சார்பில் டாக்டர் ஜிம்திவாகர் உள்ளிட்டோர் தடுப்பூசியால் தடுக்க கூடிய நோய்கள் குறித்து விரிவாக பேசினர். உலக சுகாதார நிறுவன ஆலோசகர் பாலகணேஷ் குமார் இத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். இக்கருத்தரங்கில் அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!