பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்
தேவகோட்டை-தேவகோட்டை -- காரைக்குடி இடையே ஓடும் பஸ்களில் உயர்த்திய கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு கட்டணம் ரூ.17 வசூலித்தனர். காரைக்குடியில் பாதாள சாக்கடை பணி நடந்ததால் பஸ்கள் அனைத்தும் மானகிரி, தேவகோட்டை ரஸ்தா வழியாக தேவகோட்டைக்கு சென்றன. இதனால் கூடுதல் டீசல் செலவானதால் கட்டணத்தை ரூ.20 ஆக உயர்த்தினர்.இக்கட்டண உயர்வு கடந்த 8 மாதமாக வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து வழக்கம் போல் காரைக்குடிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் உயர்த்திய கட்டணத்தை குறைக்க போக்குவரத்து நிர்வாகம் முன்வரவில்லை. எனவே பழைய கட்டணமான ரூ.17 மட்டுமே வசூலிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!