Load Image
dinamalar telegram
Advertisement

முதியவரை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை



தேவகோட்டை,-கண்ணங்குடி அருகே வலையனவயலில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மணல் திருட்டு நடந்து வருகிறது. மணல் திருட்டு தொடர்பாக வனத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல்கள் சென்றன. இதனை தொடர்ந்து ரோந்தை தீவிர படுத்தினர். கடந்த 2015 ஆம் ஆண்டு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மணல் திருட்டு குறித்து வலையனவயலை சேர்ந்த சுப்பையா 72, தான் தகவல் தெரிவிப்பதாக எண்ணி, அர்ச்சுணன் முதியவரை தாக்கினார். இந்த வழக்கு தேவகோட்டை நீதிமன்றத்தில் நடந்தது. அர்ச்சுனனுக்கு 2 ஆண்டு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement