காரைக்குடியில் நாளை எஸ்.ஐ., தேர்வு
சிவகங்கை,--காரைக்குடியில் அழகப்பா கல்வி நிறுவன வளாகங்களில் நடக்கும் நேரடி எஸ்.ஐ., தேர்வில் காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, தமிழகத்தில் 444 நேரடி எஸ்.ஐ., பதவிக்கான எழுத்து தேர்வு ஜூன் 25, 26 ஆகிய இரு நாட்களில் நடக்கிறது. இம்மாவட்டத்தில் ஜூன் 25 அன்று நடக்கும் தேர்வினை 4,083 பேர் எழுதுகின்றனர். தேர்வு அறை, வளாக கண்காணிப்பு பணியில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., தலைமையில் 575 அதிகாரிகள், போலீசார் ஈடுபடுவர். தேர்வு முடியும் வரை வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படும். காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்வது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தேர்வு எழுத தடை விதிப்பதோடு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காலை, மதியம் தேர்வு நடப்பதால் தேர்வு மைய வளாகத்திலேயே கட்டணம் செலுத்தி உணவு பொட்டலம் பெற வசதி செய்துள்ளோம். காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வரக்கூடாது, என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!