தாத்தா பாட்டிகள் தின விழா
சிவகங்கை,--சிவகங்கை 21 ம் நுாற்றாண்டு மெட்ரிக் பள்ளியில் தாத்தா, பாட்டிகள் தினம் கொண்டாடினர். விழாவிற்கு பள்ளி அறங்காவலர் ராணிசத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி நிறுவனர் சுதர்சனநாச்சியப்பன், தாளாளர் யமுனா நாச்சியார் வாழ்த்துரை வழங்கினர். முதல்வர் விவேகானந்தன் வரவேற்றார். மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். மாணவர்கள் தங்களது தாத்தா, பாட்டிக்கு பூங்கொத்து கொடுத்து அன்பை வெளிக்காட்டினர். ஆசிரியர்கள் சங்கீதா, ஷகிலா, கனி, ஒருங்கிணைப்பாளர்கள் சாரதா, மேரி சோபியா ஆகியோர் ஏற்பாட்டை செய்திருந்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!