Load Image
dinamalar telegram
Advertisement

தாம்பரம் வழித்தடத்தில்12 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை:தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகள் நடக்கஉள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் இரவு நேர, 12 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.இது குறித்து, சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தாம்பரம் யார்டில் இன்று, 25, 26, 27, 28ம் தேதிகளில் நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரையில் நடக்கவுள்ளது. இதனால், சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் மேற்கண்ட நாட்களில் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் - சென்னை கடற்கரை இரவு 10:25; இரவு 11:25; இரவு 11:45 மணி ரயில்கள் இன்று, 25, 27ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு 11:20; இரவு 11:40; இரவு 11:59 மணி ரயில்கள் இன்று, 25, 27ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன26ம் தேதியில் ரத்து தாம்பரம் - சென்னை கடற்கரை இரவு 10:40; இரவு 11:15; இரவு 11:35 மணி ரயில்களின் சேவை வரும் 26ம் தேதியில் ரத்து செய்யப்படுகிறது சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு 11:30; இரவு 11:40; 11:59 மணி ரயில்களின் சேவை வரும் 26ம் தேதியில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement