ராமேஸ்வரம் -- பாலக்காடு ரயில் இயக்க எதிர்பார்ப்பு
சிவகங்கை,-அகல ரயில்பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம் -- பாலக்காடு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.ஆன்மிக தலமான ராமேஸ்வரம், குருவாயூரை இணைக்கும் விதத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து தினமும் இரவு 8:00 மணிக்கு பாலகாட்டிற்கு ரயில் இயக்கப்பட்டது. மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு பாலக்காடு செல்லும். மதியம் 11:15 மணிக்கு பாலக்காட்டில் புறப்படும் ரயில் மறுநாள் காலை ராமேஸ்வரம் வரும். தமிழக, கேரளா இடையே ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்களுக்கு இந்த ரயில் வசதியாக இருக்கும். ராமேஸ்வரம் -- கோயம்புத்துார் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயிலை தினமும் இயக்க வேண்டும்.மதுரையில் தினமும் இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:00 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் பாசஞ்சர் ரயிலையும் இயக்கினால் மதுரைக்கு வரும் வடமாநில பக்தர்கள் ராமேஸ்வரம் சென்றுவர எளிதாக இருக்கும். எனவே இம்மூன்று ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!