Load Image
dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் வேகமாக பரவும் பிஏ 4, பிஏ 5 வகை கொரோனா

சென்னை:தமிழகத்தில், 'பிஏ 4, பிஏ 5' வகை கொரோனா வேகமாக பரவி வருவதாக, மக்கள் நலவாழ்வு அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, அடையாறு, கஸ்துாரிபாய் நகர் 3வது பிரதான சாலையில், கொரோனா தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, அங்கு நடந்து வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:உலகம் முழுதும், தினசரி 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்தியாவில், 8 மாநிலங்களில், 24 மணி நேரத்தில் 6,000 வரை தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்திலும், கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. சேலம், நாமக்கல், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், தினசரி தொற்று பாதிப்பில், 50 சதவீதம் பேர், சென்னையில் பாதிக்கப்படுகின்றனர்.சென்னையில் 112 தெருக்களில் 3 பேருக்கு மேல்; 25 தெருக்களில் 5 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, சென்னையில் 2,225 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 92 சதவீதம் பேர், வீடுகளில் தனிமைப்படுத்தி, சிகிச்சை பெறுகின்றனர்.இவர்களை, சென்னை மாநகராட்சி, 3,500 களப்பணியாளர்கள் வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கிறது. வீடுகளில் இடவசதி இல்லாதவர்கள் என்ற அடிப்படையில், ஐந்து பேர் மட்டுமே, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 8 சதவீதம் பேர், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது. இவர்கள் அனைவருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன், அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும்.
மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது என்பது முக்கியம். எனவே, பெற்றோர் அலட்சியமாக இருக்கக் கூடாது. தற்போது, கொரோனா பரவலின் பெரும் பகுதி 'பிஏ- 4, பிஏ- 5' என்ற வகை தொற்றாகத் தான் உள்ளது. இவை வேகமாக பரவும் தன்மை உடையன. தமிழகத்தில் வரும் ஜூலை 10ல், 1 லட்சம் இடங்களில், 31வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement