Load Image
dinamalar telegram
Advertisement

பெயர்ந்துவிழும் கட்டட கூரைகள் கலெக்டர் அலுவலகத்தில் ஆபத்து



ராமநாதபுரம்,--ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைவுப்பகுதி தொடங்கி வாகன நிறுத்துமிடம், பழைய அலுவலகத்தில் அடிக்கடி கட்டடங்களின் கூரை பெயர்ந்து விழுவது தொடர்கிறது. இதனால் பணியாளர்கள், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியில் கலெக்டர்அலுவலகம் செயல்படுகிறது. இங்குள்ள பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம், நீதிமன்றகிளை, தணிக்கை அலுவலகம், நிலஎடுப்பு தாசில்தார் அலுவலகம் செயல்படுகின்றன. மேலும் வெளியே வாகனங்கள் நிறுத்துமிடம், கலெக்டர் அலுவலகம் நுழைவு பகுதி 'ஆர்ச்' உள்ளிட்டவைகள்கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன.இதன் காரணமாக கட்டடங்கள் வலு இழந்து அடிக்கடி கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மின்கசிவு ஏற்பட்டு கடந்தாண்டு முதன்மை கல்வி அலுவலகத்தில் தீவிபத்து நடந்தது. அதன்பின் பெயரளவில் செப்பனிட்டு அப்படியே விட்டுள்ளனர். பொதுப்பணித்துறை கட்டுமானபிரிவு பொறியாளர்கள் 'பார்க்கிங்' பகுதியை 'சீல்' வைத்தும் தடையை மீறி கடை வைத்து, வாகனத்தை நிறுத்துகின்றனர். பழுதடைந்த கட்டடங்களால் பணியாளர்கள், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதில் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement