Load Image
dinamalar telegram
Advertisement

பிரதமருடன் கலந்துரையாடராமநாதபுரம் விவசாயிகள் தேர்வு



ராமநாதபுரம்,--மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா வாரவிழாவில், பிரதமர் நரேந்திரமோடியுடன் கலந்துரையாட ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் ராமர், முத்துராமலிங்கம் தேர்வாகியுள்ளனர்.மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா வாரவிழா டில்லியில் ஜூலை 1 முதல் 7 வரை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, பொதுமக்கள், விவசாயிகள், அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த விவசாயிகள் ராமர், முத்துராமலிங்கம் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களை நேற்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனுஷ்கோடி உடன்இருந்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement