பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை செய்தவருக்கு விருது
ராமநாதபுரம்,--ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் சுதந்திரதினவிழாவில் விருதுபெற விண்ணப்பிக்கலாம்.2022- -- -23ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டும், சமூகநலன், பெண்ணிற்கு பெருமை சேர்த்தல், மொழி, இனம், பாகுபாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் சிறப்பான மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் பணிபுரிந்திருக்க வேண்டும். அதற்குஉரிய சான்றுகளுடன் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம்மாவட்ட சமூகநல அலுவலகத்தை 04567- -230 466 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!