சிறுமிக்கு வன்கொடுமை வளர்ப்பு தந்தைக்கு 7 ஆண்டு
சென்னை:சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிப்பவர் ஷபி, 37. இவர், கணவரை பிரிந்து 13 வயது மகளுடன் வசித்து வந்த பெண்ணை, இரண்டாவது திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்தார்.கடந்த 2019ம் ஆண்டு, மகளை பாலியல் வன்கொடுமை செய்து, தாக்கியுள்ளார். இது குறித்து, தன் பாட்டி, அத்தை ஆகியோரிடம் சிறுமி கூறியுள்ளார்.
சிறுமியின் பாட்டி அளித்த புகாரில், பழைய வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து, ஷபியை கைது செய்தனர்.இச்சம்பவம் குறித்த வழக்கு விசாரணை, போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. போலீசார் தரப்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கவிதா ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி பிறப்பித்த தீர்ப்பு:பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும், அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. வளர்ப்பு தந்தையால், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.ஆகையால், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு, குறைந்தபட்ச தண்டனை வழங்கினால், சமூகத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து சிறார்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டத்தின் நோக்கம் சிதைந்துவிடும்.
எனவே, குற்றஞ் சாட்டப்பட்ட ஷபிக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!