அக்னிபத் திட்டத்தை கைவிடவலியுறுத்தி ஊர்வலம்
ராமநாதபுரம்,--இளைஞர்களை பாதிக்கும் ராணுவத்தின் 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் இருந்து மத்திய கொடிக்கம்பம் வரை சி.ஐ.டி.யு., கொடி மற்றும் தேசியக்கொடி ஏந்தி சி.ஐ.டி.யு., சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் அய்யாதுரை தலைமை வகித்தார்.கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சந்தானம், லோடுமேன் சங்க மாவட்ட செயலாளர்சுடலைகாசி, அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் பாஸ்கரன், தனியார் மோட்டார் வாகன தொழிலாளர் சங்க செயலாளர் ஆனந்த், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் வாசுதேவன், லோடுமேன் சங்க மாவட்ட தலைவர் பூமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!