Load Image
dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க., பொதுக்குழுவில் நடந்தது என்ன?

Tamil News
ADVERTISEMENT
பரபரப்பான சூழ்நிலையில் கூடிய, அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், கூச்சல் குழப்பத்துக்கு இடையே, 40 நிமிடங்களில் முடிந்தது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்கள் அடியோடு நிராகரிக்கப்பட்டன. ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற, அடுத்த மாதம் 11ம் தேதி பொதுக்குழு மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இம்மாதம் 14ம் தேதி நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஒற்றைத் தலைமை



இதற்கு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் சில மாவட்ட செயலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
கட்சியில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், ஒற்றைத் தலைமைக்கும், அந்த பதவிக்கு பழனிசாமி வர வேண்டும் என்பதற்கும் ஆதரவு தெரிவித்தனர். பொதுக்குழுவில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவும் முடிவு செய்தனர்.

இதனால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க, பன்னீர்செல்வம் தரப்பினர், பொதுக்குழுவை ஒத்தி வைக்க வலியுறுத்தினர். பழனிசாமி நிராகரிக்கவே, பொதுக்குழு நடத்த தடை விதிக்க வேண்டும் என, காவல் துறையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மனு கொடுத்தனர்.
அதை போலீசாரும் நிராகரித்ததால், பொதுக்குழு கூட்டத்துக்கும், கட்சி சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும் தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நேற்று முன்தினம் விசாரித்தார். 'பொதுக்குழு நடத்தும் முறையில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது' எனக் கூறி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்தார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் சார்பில், அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு நள்ளிரவு வரை விசாரித்தது. விசாரணை முடிவில், பொதுக்குழு நடத்த அனுமதி அளித்ததுடன், 'பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்த, 23 தீர்மானங்களை மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம். மற்ற புதிய தீர்மானங்களை ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்கக் கூடாது' என, நேற்று காலை
தீர்ப்பளித்தனர்.இச்சூழலில், நேற்று காலை, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் காலை 7:00 மணியில் இருந்து மண்டபத்திற்கு வந்தனர். காலை 10:30 மணிக்கு பன்னீர்செல்வம் வந்தார்.

யாரும் பேசவில்லை



அவருக்கு எதிராக, 'ஒற்றைத் தலைமை வேண்டும்' எனக் கோஷம் எழுப்பினர். அவரது ஆதரவாளர்கள் சிலர், அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.அவரிடம் கட்சி நிர்வாகிகள் யாரும் பேசவில்லை.
அரங்கிற்குள் அமர்ந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், 'வேண்டும் வேண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும்; பழனிசாமி தான் வேண்டும்; வேண்டாம் வேண்டாம் இரட்டைத் தலைமை வேண்டாம்; ஓ.பி.எஸ்., ஓடிப் போ' என, கோஷங்கள் எழுப்பினர்.
வைத்திலிங்கம் மேடைக்கு வந்தபோது, 'துரோகி' எனக் கோஷம் எழுப்பினர். எனவே, பன்னீர்செல்வமும், அவரும் மேடைக்கு செல்லாமல் கீழே நின்றிருந்தனர். காலை 11:20 மணிக்கு பழனிசாமி வந்தார். அவருக்கு மேளதாளங்கள் முழங்க, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலர் துாவி மரியாதை



மண்டபத்திற்குள் 11:29 மணிக்கு நுழைந்தார். கட்சியினர், அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர் மேடைக்கு வந்ததும், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து, பனனீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மேடைக்கு வந்தனர்.அனைவரும் மேடையில் அமர்ந்தனர். அதன் பின் எழுந்து சென்று, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் துவங்குவதாக அறிவித்தார்.'கூட்டத்தை தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்தி தர வேண்டும்' என, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அப்போது, அவருக்கு எதிராக நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.

தீர்மானங்கள் நிராகரிப்பு



அதைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வழிமொழிந்தார். கூட்டம் துவங்கியது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒலிபெருக்கி முன்பு வந்து, 'தீர்மானங்கள் அனைத்தையும், பொதுக்குழு நிராகரிக்கிறது' என அறிவித்தார். அதை வரவேற்று, அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.அதன்பின், முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். பன்னீர்செல்வம் பெயரை உச்சரிக்கவில்லை. பின், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எழுந்து பேசியதாவது:பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்து விட்டனர். அப்படி நிராகரித்து விட்ட தீர்மானத்திற்கு பின்பு, அவர்கள் வைக்கிற ஒரே ஒரு கோரிக்கை ஒற்றைத் தலைமை வர வேண்டும் என்பது தான். அந்த ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து, அடுத்து எப்போது கட்சி பொதுக்குழுவை தலைமை கூட்டுகிறதோ, அப்போது அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.


அடுத்து முன்னாள் அமைச்சர் செம்மலை, இரங்கல் தீர்மானங்களை வாசித்தார். முன்னாள் கவர்னர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ஐக்கிய அரபு எமிரேட் அதிபர், பிரபல பின்னணிப் பாடகர் லதா மங்கேஷ்கர், கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது; மவுன அஞ்சலி செலுத்தினர்.

அவைத் தலைவர் தேர்வு



அதன்பின், அவைத் தலைவர் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பழனிசாமி எழுந்து, ''அ.தி.மு.க., அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினரால் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார். கரவொலி எழுப்பி ஒப்புதல் அளிக்கவும்,'' என்றார்.
அதை, முன்னாள் அமைச்சர் சீனிவாசன் முன்மொழிந்தார். முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வழிமொழிந்தார். கட்சி அவைத் தலைவராக, தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னை தேர்வு செய்ததற்காக, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள கோரிக்கை மனுவை, அவைத் தலைவரிடம் அளிக்கிறேன். தமிழமகன் உசேன் தலைமையில், தற்போது நடக்கும் பொதுக்குழுவில், பொதுக்குழு உறுப்பினர்கள் 2,190 பேர் கையெழுத்திட்டு அளித்துள்ள மனுவின் பொருள் குறித்து விவாதிக்க வேண்டும்.கட்சியின் தற்போதைய நிலை; இரட்டை தலைமையால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, சங்கடங்கள், நிர்வாக சிக்கல்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.

இரட்டை தலைமையால், ஆளும் தி.மு.க., அரசை கடுமையாக எதிர்த்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடம் மிகுந்த ஏமாற்றம், அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.இரட்டை தலைமையின் முரண்பாடான, ஒருங்கிணைப்பில்லாத செயல்பாட்டால், தொண்டர்களிடம் மிகப்பெரிய சோர்வு ஏற்பட்டுள்ளது. 100 ஆண்டுகளானாலும் கட்சி நிலைத்து நின்று மக்கள் பணியாற்றும் என்ற ஜெயலலிதா ஆசை நிறைவேற, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று வலிமையான, தைரியமான, ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே, இப்பொதுக்குழுவில் இரட்டைத் தலைமையை ரத்து செய்து, ஒற்றைத் தலைமையின் கீழ், தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்து, பதிவு செய்ய வேண்டும். அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த பொதுக்குழு தேதி



சி.வி.சண்முகம் அளித்த கோரிக்கை மனுவை பெற்ற பின், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியதாவது: பொதுக்குழு உறுப்பினர்கள் 2,190 பேர் கையெழுத்திட்டு அளித்த, ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டேன். அடுத்த பொதுக்குழு தேதியை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அடுத்த மாதம் 11ம் தேதி காலை 9:15 மணிக்கு, இதேபோல் சிறப்பாக பொதுக்குழுக் கூட்டம் நடக்கும். இவ்வாறு அவர் அறிவித்தார். அதை வரவேற்று கோஷங்கள் எழுப்பினர். அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி நன்றி கூறினார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ., மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபாகர் ஆகியோர் எழுந்தனர். வைத்திலிங்கம் ஒலிப்பெருக்கி முன்பு வந்து, ''சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் பொதுக்குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்,'' என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, நான்கு பேரும் அங்கிருந்து வெளியேறினர்.வேலுமணி நன்றியுரை ஆற்றியதும், கூட்டம் நிறைவடைந்தது. பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து, கட்சியினர் மாலை அணிவித்தனர், பூங்கொத்து, வெள்ளி செங்கோல், வீரவாள் போன்றவை வழங்கப்பட்டன.


பொதுக்குழு துளிகள்.

.. * பொதுக்குழு நடந்த மண்டபத்திற்குள் காலை ௮:௦௦ மணிக்கு முன்பே, உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டனர். பழனிசாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை கோஷத்தை எழுப்பியபடி, அவர்கள் மண்டபத்திற்குள் அமர்ந்திருந்தனர்
* ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தன் பிரசார வாகனத்திலும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தன் காரிலும், பொதுக்குழு நடந்த மண்டபத்திற்கு வந்தனர். பழனிசாமிக்கு மட்டுமே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பன்னீர்செல்வத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. பன்னீர்செல்வம் வந்தபோது, பலர் எழுந்து எதிர் கோஷம் போட்டனர்.அவர்களை, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, வைகைச்செல்வன் ஆகியோர் அமைதி காக்கும்படி கூறினர்
* மதிய விருந்தில், ஜாங்கிரி, பாதாம் கீர், சாதம், சாம்பார், வத்தல்குழம்பு, ரசம், தயிர் சாதம், வெஜிடபிள் புலாவ், தயிர் பச்சடி, அவியல், பொரியல், ஊறுகாய், அப்பளம், மோர் மிளகாய், காலிபிளவர் பக்கோடா, மசால் வடை, வாழைப்பழம் ஆகியவை பரிமாறப்பட்டன. காலையில் இட்லி, பொங்கல், வடை, சாம்பார், சட்னி, கேசரி ஆகியவை அடங்கிய 'மினி டிபன் பார்சல்'கள் வழங்கப்பட்டன
* பொதுக்குழு துவங்குவதற்கு முன், சம்பிரதாயத்திற்கு செயற்குழுக் கூட்டம் நடப்பது வழக்கம். இதற்காக, தனி அறையில் செயற்குழு உறுப்பினர்கள் காத்திருந்தனர். ஆனால், செயற்குழுக் கூட்டம் நேற்று ஒப்புக்கு கூட நடக்கவில்லை.


Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (2 + 19)

  • duruvasar - indraprastham,இந்தியா

    இந்த ஒருசில மாவட்ட செயலாளர்கள் என்பது மர்ம ஆசாமிகள் மாதிரியான ரகத்தில் வருபவர்களா ? பயங்கர மர்மகாவே இருக்கிறதே.

  • Mahalingam Laxman - Chapel Hill,யூ.எஸ்.ஏ

    கருத்து வேறுபாடுகளினால் பொதுத் தேர்தலில் தேரரும் ஏ.பி.ஸ் , ஓ.பி.ஸ் புத்தி வராமல் கட்சி நண்மையை பார்க்காமல் சொந்த நலனில் சண்டை போடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தி.மு.க. விற்கு மிக நல்லதாய் போயிற்று.

Home பொதுக்குழு அரங்கில் பரபரப்பு: ஓபிஎஸ்.,க்கு எதிராக கோஷம் (19)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    இதயக்கனி போனதற்கு பிறகு எந்த காயும் கனியவில்லை அதிமுகவில்.

  • Surya krishnan -

    OPS oru thooroki

  • Tamilnesan - Muscat,ஓமன்

    தனக்கு பிறகு இவர் தான் வரவேண்டும் என்று சொல்லாத முன்னாள் தலைமை.... இதெல்லாம் ஒரு கட்சியா......ஒரு கட்சியை எப்படி குடும்ப கம்பெனி ஆக்குவது என்று மஞ்ச சட்டை மடாதிபதியிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

  • Sai - Paris,பிரான்ஸ்

    ஒருவர் சம்பாதித்த சொத்துக்களைவிட அவர் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டுமல்ல தன் இனத்துக்கே தான் சார்ந்த கட்சிக்கே சம்பாதித்த கெட்டபெயர்தான் பலமடங்கு அதிகமானது மீள்வது கடினம் சலியாத உழைப்பால் மேற்கு உயர்ந்தது தெற்கு தேய்ந்தது

  • mukundan - chennai,இந்தியா

    ஒரு வெளிஆளாக நான் சொல்கிறேன், பழனிசாமியை நம்ப மனம் மாறுகிறது. ஜெயலலிதா இருந்த பொழுது சசிகலாவின் கைப்பாவையாக இருந்தார் (அதனால் தான் சசிகலா பழனிசாமியை டம்மி முதல்வராக தேர்ந்தெடுத்தார்). பின்னர் இவர் முதல்வர் ஆனபின் பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து சசிகலாவின் காலை வாரினார். இப்பொழுது பன்னீர்செல்வத்தின் காலை வருகிறார். என்னை பொறுத்த வரை பழனிசாமி என்றைக்குமே சுயநலமிக்கவராக தான் தெரிகிறார்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    அவருடைய ராசியே அப்படி தான் போல.

  • Manjunathan Shan - Sydney,ஆஸ்திரேலியா

    ....

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    ஒ பி எஸ் க்கு இந்த அவமானம் தேவையா? ஏன் பொதுக்குழு கூட்டத்துக்கு போகணும்.. எல்லோரும் போ போ னு சொல்லணும். தன் தலையில் சேற்றை வாரி பூசி கொண்டார்.

  • சீனி - Bangalore,இந்தியா

    காசு, துட்டு, மணி, டப்பு.... கண்ணீர் ஏன் சின்னம்மாவ உள்ளே கொண்டு வர விரும்புறார்னா, முடிஞ்ச வரைக்கும் இவரும், சின்னம்மாவும் திமுக ஜால்-ராவோட சம்பாதிச்சிட்டு, அதிமுக கட்சியையும் தொண்டர்களை அனாதையா விட்டு செல்லத்தான்.

  • சீனி - Bangalore,இந்தியா

    காசு, துட்டு, மணி, டப்பு..... கண்ணீர் ஏன் சின்னம்மாவ உள்ளே கொண்டு வர விரும்புறார்னா, முடிஞ்ச வரைக்கும் இவரும், சின்னம்மாவும் திமுக ஜால்ராவோட சம்பாதிச்சிட்டு, அதிமுக கட்சியையும் தொண்டர்களை அனாதையா விட்டு செல்லத்தான்.

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    சமாதியில் சென்று ஒப்பாரி த்யானம் எல்லாம் செய்தும் அதிக ஆதரவு ஈ பீ எஸ் கு தான் உள்ளது என்று தெரிந்தும் ஆட்கள் மூலம் வழக்கு தொடர்ந்து கட்சியை இன்னொரு மாற்று கட்சி சந்தோசம் தரும் வழியில் பிள்ளையும் நீங்களும் செய்த கூத்தை உலகமே பார்த்தது ...கொங்கு நாடு சிங்கம் தான் சரியான தேர்வு

  • ஆரூர் ரங் -

    ஒருங்கிணைப்பாளர் பன்னீரின் ஒப்புதல் இல்லாமல் எந்தத் தீர்மானத்தையும் கொண்டு வரவும்😉 விவாதிக்கவும் நிறைவேற்றவும் முடியாது. இந்த நிலையில் அவரே கோர்ட்டில் தடையுத்தரவு கேட்கிறார்😛. இப்போ ஸ்டாலின் OPS EPS இடையில்தான் சூப்பர் காமெடியன் யார் என்பதில் போட்டி நடக்கிறது. ஒரே தீர்வு? எந்த முறையிலாவது திராவிஷத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்.

  • abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா

    பன்னீர் ஒரு நம்பிக்கை துரோகி ஆரம்பத்தில் ஜெயா மறைவுக்கு பின் பன்னீர் ஆதரவாளர்கள் அனைவரையும் நடு காட்டில் விட்டுவிட்டு துணை முதல்வர் பதவிக்காக ஓடிச்சென்றவர் தான் பன்னீர் ஆதரவாளர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்தனர் திரட்டில் விட்டு சென்ற பாவம் சும்மாவிடுமா

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    நாட்டில், உலகில், அவனவன் காலையில் எழுந்தோமா, வேலைக்கு போனோமா, சம்பாதிக்கலாமா, வீட்டை காப்பாத்தலாமா என்று யோசித்து வேலைக்கிப்போய், குடும்பத்தை காப்பாத்துகிற வேளையில் செயல்படுவார்கள். ஆனா, இந்த அரசியல்வாதி மற்றும் அவன் அல்லக்கைகள் மட்டும் காலையில் எழுந்தவுடன் பல் விளக்காமல் இப்படி கும்பல் கும்பலாய் சேர்ந்துகொண்டு, தகாத வழிகளில் மக்களை ஏமாற்றி சம்பாதிக்கிறான். அவனவன் கழுத்தில் கிலோ கணக்கில் தங்க செயின் மின்னுது, விலை உயர்ந்த கார்கள், அப்பப்பா... இப்படி பட்ட ஆட்கள் அக்னிபத் திட்டத்தை எப்படி ஆதரிப்பார்கள்.

  • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

    இவ்வளவு ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் போது ஏன் பன்னீர் செல்வம் புரிந்துகொள்ள மறுக்கிறார். அவருடைய ஏரியாவில் கட்சியை வளர்க்க எண்ணலாம்.

  • N.GIRIVASAN - Chennai,இந்தியா

    வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம எது . கூக்குரலாலே ஜெயிக்காது அந்த கோட்டைக்குள் போனால் திரும்பாது. தொண்டர்கள் போய்விட்டால் கட்சி இருப்பது தெரியாது.காலத்தை வெல்ல உன்னால் முடியாது.ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு..உணர்ந்து செயல் பட்டால் கிடைக்கும் வாழ்வு.

  • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

    அமைதியாக நடக்க இது ஒன்றும் குடும்ப தொழில் அல்ல, இது ஒரு சுதந்திரமான கட்சி, கட்சி தொண்டர்கள் முடிவு செய்யும் சுதந்திரம் கொண்ட தொண்டர்கள் சக்தி வாய்ந்த கட்சி. கடைசி வரை இருக்கும் படி காலம் சென்ற மக்கள் திலகம் முதல்வர், புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ரமசந்திரன் அவர்களால் நீண்டகால எதிர்காலத்திக்கு நிலைக வேண்டும் என சட்ட திடங்களையும் விதிகளையும் வலுவாக உள்ளடக்கி உருவாக்கிய கட்சி வரிசு அரசியலுக்கு முழுக்க முழுக்க வாய்ப்பிலாமல் உல்ல கட்சி. அதனால் தான் ஜானகி வாரிசு வீழ்ட்தப்பட்டு ஜயலலிதா அரசியல் திறமை வென்றது.. அதேபோல் வரிசு சசிகலா வீழ்த்தப்பட்டு எடபாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார் அவரும் திறம்பட் செயல் பட்டு இன்று ஒரு போட்டி அதிலும் திறன் ஒபிஎஸ் அல்லது இபிஎஸ் இதில் யார் என போட்டி நிச்சயம் குழப்பம் , பிரச்சனி என அனதும் இருக்கும் இல்லை என்றால் தான் நாம் ஆச்சர்யபட வேண்டும் மீண்டும் நீதிமணர்த்தி அணுகி யோ தேர்தல் ஆணைய்த்தினை அணுகியோ பொதுக்குழு கூட்ட சட்டம் மூலம் அனுமதி பெற்றோ அல்லது சுமூக தீர்வினாலோ ஒர்ய் தலமை யய் அடைய அரசியல் திறமை உள்லவர் அடைய முடியும் இது ஒன்றும் திமுக வோ காங்கிரஸொ அல்லது மதிமுக வோ தேமுதிகவோ அல்ல வாழ்த்துக்கள் அ இ அ தி மு க வாழ்க புரட்சி தலைவர் எம் ஜிஆர்

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    இதை நேரடியாக ஒளிபரப்பலாம் .

    • Sidhaarth - SENGOTTAI ,இந்தியா

      நியூஸ் ஜே டி வி யில் நேரலை. நாட்டு நடப்பே தெரியல அண்ணாமலைஜி

Advertisement