Load Image
dinamalar telegram
Advertisement

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைதவிர்க்க கலெக்டர் வலியுறுத்தல்



ராமநாதபுரம்,--ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில், 'எனது குப்பை எனது பொறுப்பு' என்பதை வலியுறுத்தி தீவிரத் தூய்மை பணிகள் விழிப்புணர்வு முகாம் குறித்து விளக்க கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் கலெக்டர்ஜானி டாம் வர்கீஸ் பேசியதாவது:பாட்டிலில் தண்ணீர் இருக்கும் வரை அதனை பாதுகாப்பதுபோல குடித்து முடிந்தபிறகு பாட்டிலை குப்பைதொட்டியில் போட வேண்டும். ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க வேண்டும். உணவகங்களில் பிளாஸ்டிக் பேப்பர், குவளைகளை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக நகராட்சி அலுவலர்கள் பொது மக்களிடம் பிளாஸ்டிக் கழிவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாளை குப்பையை தரம் பிரித்து கொடுப்பது பற்றிய விளக்கவேண்டும்,' என்றார். கலெக்டர் தலைமையில், நகராட்சி கமிஷனர்சந்திரா, கவுன்சிலர்கள், பணியாளர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள்நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழியை எடுத்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement