Load Image
dinamalar telegram
Advertisement

பொதுக்குழுவை கூட்ட அவைத்தலைவருக்கு அதிகாரமில்லை: வைத்திலிங்கம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறியதாவது:
உயர்நீதிமன்ற உத்தரவின்படி 23 தீர்மானங்கள் தவிர்த்து புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது. இதையும் மீறி தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளதால், இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். தீர்மானங்களை ரத்து செய்ய இவர்களுக்கு உரிமை இல்லை. அவைத்தலைவர் தேர்வும் செல்லாது. அதிமுக அவைத்தலைவரை அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட பொது செயலாளராக இருந்த எம்.ஜி.ஆர்., அறிவித்தார். அதன் பிறகு, ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் அறிவிக்க வேண்டும். இது தான் அதிமுகவின் நடைமுறை. 23 தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே, பொது குழு உறுப்பினர்களும் ரத்து ஆகிவிட்டார்கள். அப்புறம் எப்படி அவைத்தலைவரை தேர்வு செய்ய முடியும். கூட்டு தலைமை குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார். இன்று நடந்தது பொதுக்குழுவே இல்லை. அரை மணி நேரத்தில் நடந்து முடிந்த ஓரங்க நாடகம். பேராசை, பதவி வெறி, சட்டத்தை மறந்துநீதிமன்றத்தை மறந்து அவர்கள் நடத்திய நாடகம் சர்வாதிகாரத்தின் உச்சிக்கு சென்று விட்டது.
பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவை தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஜூலை11ம் தேதி பொதுக்குழு கூட்டக் கூடாது.
கட்டுப்பாடு இல்லாத காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடந்துள்ளது. கட்சி நன்றாக இருக்க வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் கூட்டுத்தலைமை தான் கட்சி தலைமைக்கு நல்லது என்பது தான் ஒருங்கிணைப்பாளரின் விருப்பம்.
இதற்கு அவர்கள் ஒத்துவந்தால் ஒன்று சேர்ந்து கட்சியை நடத்துவோம் எதிர்காலத்தில் ஆட்சியயை பிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (3)

  • elangovan - Chennai,இந்தியா

    மறுபடியும் முதல்ல இருந்தா

  • GMM - KA,இந்தியா

    கூட்டு தலைமை தான் அண்ணா திமுக விற்கு நல்லது என்றால், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் கூட்டு தலைமை இது வரை இல்லை. ஏன்? MGR, ஜெயா கூட்டு தலைமை அமைக்க வில்லை. ஏன்? OPS சசி, தினகரன், இளவரசி போன்ற தொண்டர்கள் இல்லாத சாதி குழு நட்பு. திமுகவுடன் நிழல் உறவு. சாதி, வாரிசு அரசியல் விரும்பி.- EPS, OPS யை விட பரவாயில்லை. ஆனால் தற்காலிக தகுதி மட்டும். சிறந்த தலைமை தகுதி இல்லை? அண்ணா திமுக தொண்டர்கள் கூட்டம் கண்டு, திமுகவிற்கு கண்டிப்பாக அச்சம் இருக்கும். பெரிய கூட்டணி அமைத்து சிறிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வென்றதை நினைவு கொள்ள வேண்டும். திராவிட கட்சிகள் ஊழல் பட்டியல் நீண்டு இருக்கும். இவை தமிழகத்தை ஆளும் தகுதி குறைந்தவை. மாற்று கட்சி தேவை.

  • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

    ஜெயலலிதா காலத்தில் அதிமுக எம்பி தி மு க கட்சி தலைவரை பார்த்தது உண்டா ? இது கட்டுப்பாடா ?

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்