ADVERTISEMENT
சென்னை: அதிமுக பொதுக்குழு மேடையில் அக்கட்சி நிர்வாகி ஒருவர் பழனிசாமிக்கு ‛பன்னீர்' ரோஜாவால் செய்யப்பட்ட மாலையை போட முயன்றபோது அதனை ஏற்காமல் கோபத்தை காட்டினார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றம் சென்ற நிலையில், புதிய தீர்மானம் எதையும் நிறைவேற்றக்கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இது பழனிசாமிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று (ஜூன் 23) நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் துவங்கியது முதல் சற்று ‛டென்ஷனாக' காணப்பட்ட பழனிசாமி, பன்னீர்செல்வத்தை நேரடியாக கூட வரவேற்காமல் இருக்கையில் அமர்ந்தார். இருவரின் இருக்கைக்கு நடுவே அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்திருந்தார். இருவரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மேடையில் பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது அதிமுக நிர்வாகி ஒருவர் அவருக்கு ‛பன்னீர்' ரோஜாக்களால் ஆன மாலையை போட முயன்றார்.ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்போது அந்த நிர்வாகியை பார்த்து, “ஏ சும்மா இருய்யா” என கடுகடுத்தபடி கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஒற்றைத் தலைமை குறித்து அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த பழனிசாமிக்கு மீண்டும் அதே நிர்வாகி வந்து, பன்னீர் ரோஜா மாலையை போட முயன்றார். அப்போதும் கோபத்தை வெளிப்படுத்திய பழனிசாமி, பன்னீர் ரோஜா மாலையை ஏற்க மறுத்தார்.
ஒற்றை தலைமை பொறுப்பு பழனிசாமி பக்கம் வருவது ஏறக்குறைய முடிவாகியுள்ள நிலையில், பழனிசாமி, தன் கட்சியினரிடம் இவ்வாறு நடந்து கொண்டது ஒருவித ஏமாற்றத்தை அளிப்பதாக ஒருதரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றம் சென்ற நிலையில், புதிய தீர்மானம் எதையும் நிறைவேற்றக்கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இது பழனிசாமிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று (ஜூன் 23) நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் துவங்கியது முதல் சற்று ‛டென்ஷனாக' காணப்பட்ட பழனிசாமி, பன்னீர்செல்வத்தை நேரடியாக கூட வரவேற்காமல் இருக்கையில் அமர்ந்தார். இருவரின் இருக்கைக்கு நடுவே அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்திருந்தார். இருவரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வாசகர் கருத்து (10)
இனி ‛பன்னீர்' ரோஜா மட்டும் அல்ல, பன்னீர் திராச்சை , பன்னீர் பட்டர் மசாலா கூட பிடிக்காது
பனீர் (பால் பொருள்) வேறு ..... பன்னீர் வேறு ......
யடப்பாடிக்கு பன்னீர் ரோஜாவை பார்க்கும் போது பன்னீர் செல்வத்திற்கு செய்த துரோகம் நினைவிற்கு வருகிறது.
ஒரு கூட்டத்தையே ஒழுங்கா நடத்த முடியாதவங்க எப்படி 4 வருஷம் தமிழ்நாட்டை ஆண்டங்கன்னு தெரியலையே....
எல்லாம் மேல இருக்கிறவன் தயவால்தான்
பன்னீர் ரோஜாவைப்பார்த்து வெந்நீர் பட்டதுபோல்-ஆஹா என்ன ஒரு எதுகை மோனை.
கொடநாடு கேஸுக்கு இப்படி மிட்நைட் தீர்வு வராதா?