ADVERTISEMENT
பரபரப்பான வாழ்க்கை முறையால் ஓடும் கால்களை நாம் கவனிப்பதே இல்லை. இதனால் பாத வெடிப்பு, வலி போன்ற பல இன்னல்கள் நமக்கு வருகிறது. உடலின் மொத்த சுமையையும் தாங்கும் பாதத்தை கொஞ்சம் பராமரிக்க வேண்டாமா? நம் உடம்பில் உள்ள முக்கிய நரம்புகள் பாதத்தில் வந்து இணைகிறது. இப்படி முக்கியம் வாய்ந்த பாதத்தை வீட்டிலிருந்த படியே பெடிக்யூர் செய்து பாதுகாக்கலாம்.
பெடிக்யூர் உங்கள் பாதங்களை புதுப்பித்து பாத வெடிப்பை போக்குகிறது. மேலும் பாதங்களுக்கு நல்ல மசாஜ் செய்யப்படுவதால் நரம்புகள் ரிலாக்ஸ் ஆகும். உங்களுக்கு உள்ள வெடிப்பு பிரச்னையை பொறுத்து மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பெடிக்யூர் செய்து வந்தாலே போதும். பாதங்கள் பட்டு போன்று பளபளக்கும். வலி, வீக்கம் உங்களை அண்டாது.
பெடிக்யூர் செய்யத் தேவையான பொருட்கள்:
* ஒரு அகண்ட டப்
* வெந்நீர்
* எலுமிச்சை
* ஷாம்பு
* கல் உப்பு
* நெயில் கட்டர்
* சுத்தம் செய்யும் கல், பிரஷ், ஸ்கிரப்பர்
* மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெய்
* நெயில் பாலிஷ் ரிமூவர்
நகம் வெட்டுதல்:
முதலில் கால் விரல் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை ரிமூவர் மூலம் நீக்கவும். பின் விரல்களில் உள்ள நகங்களை வெட்டிக்கொள்ளவும். அதன் பிறகு உங்களது விருப்பம் போல் ஷேப் செய்யவும். நகங்களை வெட்ட சீரமமாக இருந்தால் ஊற வைத்தப்பின் வெட்டவும்.
சுடு தண்ணீர் வாஷ்:
ஒரு டப்பில் கொஞ்சம் சுடும் வென்நீரை நிரப்பி, அதில் கல் உப்பு, சிறிது ஷாம்பு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து வைக்கவும். பின் அந்நீரில் கால்களை 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஸ்கிரப்பிங் :
20 நிமிடம் கால்கள் ஊறியதால், பாதங்கள் மிகவும் மென்மையாக மாறியிருக்கும். நக இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை எளிதில் நீக்கலாம். மேலும் வெடிப்பு உள்ள பகுதியில் ஸ்கிரப் கல் கொண்டு முதலில் தேய்க்க வேண்டும். பின் மெட்டல் ஸ்கிரப்பர் கொண்டு உரச வெடிப்புகள் எளிதாக நீங்கும். இறுதியாக பிளைன் ஸ்கிரப் கொண்டு தேக்க வேண்டும்.
மாய்ஸ்ச்சரைசர் அல்லது எண்ணெய்:
ஸ்கிரப் செய்த பின் பாதங்களை சுத்தமாகக் கழுவி, துடைத்து, மாய்ஸ்ச்சரைஸர் அல்லது எண்ணெயைத் தடவ வேண்டும். கொஞ்ச நேரம் நன்றாக மசாஜ் செய்யவும். அது சருமத்தை மென்மையாக்கி, ஈரப்படுத்தி, வெடிப்புகளை சரிசெய்யும். இனி உங்கள் பாதங்கள் பொலிவோடும், சுத்தமாகவும், காட்சியளிக்கும்.
இந்த பெடிக்யூரை இரவில் படுக்கும் முன் செய்ய வேண்டும். அதனால் மாய்ஸ்ச்சரைசர் முழுவதும் பாதத்தில் ஈர்க்கப்படும். அந்த சமயத்தில் நடந்தால் அழுக்குகள் மீண்டும் பாதத்தில் படக்கூடும். பாதுகாப்பிற்காக காட்டன் சாக்ஸ் அணியலாம்.
அதிக பாதவெடிப்பு உள்ளவர்கள், முதலில் வாரம் ஒரு முறை பெடிக்யூர் செய்ய வேண்டும். உங்கள் பாதத்தை இனி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!