ADVERTISEMENT
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும், ஒற்றை தலைமையோடு அடுத்த பொதுக்குழு கூடும் எனவும் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
இன்று (ஜூன் 23) நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் ஒரே மேடையில் அமர்ந்தனர். இந்த இருவரின் இடையே அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்திருந்தார். அரங்கம் முழுதும் பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பினர். மேலும், ஓபிஎஸ் ஒழிக என்றும் கோஷம் எழுப்பியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் பேச துவங்கும் போது அவர் பேசக்கூடாது என சில உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். பின்னர் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் பொன்னையன் வழிமொழிவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், குறுக்கிட்ட முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான சி.வி.சண்முகம், ‛அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிப்பதாக' காட்டமாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‛பொதுக்குழு ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்துவிட்டனர். அனைவரும் ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, ஒற்றை தலைமை தீர்மானத்தோடு இணைத்து அடுத்த பொதுக்குழு எப்போது கூடுகிறதோ அப்போது அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்' எனக்கூறினார். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் ஆரவாரமாக குரல் எழுப்பினர்.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: நாளைய தலைவர் பழனிசாமி என்றார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: ஒற்றை தலைமை நாயகன் பழனிசாமி என்றார்.
இன்று (ஜூன் 23) நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் ஒரே மேடையில் அமர்ந்தனர். இந்த இருவரின் இடையே அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்திருந்தார். அரங்கம் முழுதும் பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பினர். மேலும், ஓபிஎஸ் ஒழிக என்றும் கோஷம் எழுப்பியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் பேச துவங்கும் போது அவர் பேசக்கூடாது என சில உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். பின்னர் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் பொன்னையன் வழிமொழிவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், குறுக்கிட்ட முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான சி.வி.சண்முகம், ‛அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிப்பதாக' காட்டமாக தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: ஒற்றை தலைமை நாயகன் பழனிசாமி என்றார்.
தனித்தனியே
பொதுக்குழு கூட்டம் துவங்கியதும், மேடையில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தனித்தனியே மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வாசகர் கருத்து (18)
அண்ணா திமுக வில் அண்ணா சிலை எங்கே ?. கட்சி பெயரையும் மாற்றிவிடலாம் . எம்ஜியார் திமுக ஜெயலலிதா திமுக என மாற்றிவிடலாம் .
பன்னீர் - அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது ,
ஆடுகின்ற ஆட்டம் ஒற்றைத்தலைமை பதவிக்கு... கூடுகின்ற கூட்டம் குவாட்டர், பிரியாணிக்கு..
பழனிச்சாமிக்கு எது கிடைத்தாலும் லாபம் ஆனால் பன்னீர்செல்வத்துக்கு எதை பெற்றாலும் நஷ்ட்டம் அதனால இடையில் இப்போது பலர் குளிர் காய நினைக்கிறார்கள் அதில் தி மு க முதலிடமாக உள்ளது.
இது ஒரு பிரச்சார கூட்டம் போல் ஆகிவிட்டது