Load Image
dinamalar telegram
Advertisement

ஐ-போன், ஆப்பிள் வாட்ச் வைத்துள்ளவரா நீங்கள் - உங்களுக்கான புதிய கேட்ஜட்..!

Tamil News
ADVERTISEMENT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், ஆப்பிள்-வாட்ச் போன்ற பொருட்களின் விலை அதிகம் என்றாலும், அதனை வாங்குவதையும் பயன்படுத்துவதையும் ஸ்டேட்டஸ் சிம்பளாகவே மக்கள் கருதுகின்றனர். இவற்றின் அப்டேட்டட் வெர்சனை வாங்குவதில் ஈடுபாடு காட்டுவதையும் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
Latest Tamil News
ஐ-போன், ஆப்பிள்-வாட்ச், ஏர்பாட் ஆகிய 3 மூன்று பொருட்களையும் தனித்தனியாக சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கும். இதனை தவிர்ப்பதற்காகவே டுவெல் சவுத் நிறுவனம் புதிய கேட்ஜட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஹைரைஸ் 3 (HiRise 3) என்ற இந்த வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேண்ட் ஐ-போன், ஆப்பிள்-வாட்ச், ஏர்பாட் ஆகியவற்றை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்கிறது.
Latest Tamil News
மேட் பிளாக் மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும் இந்த வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேண்ட், 20W USB-C பவர் அடாப்டரில் வேலை செய்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,800 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Tamil News
இதனை https://www.twelvesouth.com/products/hirise-3-wireless-charging-stand என்ற வலைத்தள பக்கத்தில் வாங்கலாம். தற்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும் இந்த ஹைரைஸ் 3 வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டேண்ட் விரைவில் இந்தியாவில் உள்ள ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement