தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வீட்டுவசதி வாரியம் சார்பில் குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில், பெரும்பாலான பகுதிகளில் பல்வேறு அரசு துறைகள், பயன்படுத்தாமல் வைத்திருந்த நிலங்கள், வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டன.இந்த நிலங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய திட்டங்களுக்கு நிலம் தேவைப்படுகிறது.

இதனால், சென்னை போன்ற நகரங்களின் புறநகர் பகுதிகளில், வருவாய் துறையின் புறம்போக்கு நிலங்கள் வாரிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டன. குறிப்பாக, பல ஆண்டுகளாக நீர் தேக்கப்படாத நீர் நிலைகளை ஒட்டிய நிலங்கள் வீட்டுவசதி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டன.இந்த வகையில் முகப்பேர் ஏரி திட்டம், அயப்பாக்கம் ஏரி திட்டம் போன்ற பெயர்களில், பல்வேறு இடங்களில் குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டங்களில் நிலங்கள் நகரமைப்பு சட்ட விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு, மனைப்பிரிவுகளாக உருவாக்கப்பட்டன.
இருப்பினும், இத்திட்டங்களில் விற்பனை செய்யப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்க, வருவாய் துறை தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது.இது குறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:ஏரி திட்டம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில திட்ட பகுதிகளில் உள்ள நிலங்கள், நகரமைப்பு சட்டப்படி மனைப்பிரிவாக அங்கீகாரம் பெறப்பட்டுள்ளன. ஆனால், வருவாய் துறையினர் இந்நிலங்ளை குடியிருப்பாக அங்கீகரித்து, பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுஉள்ளது.
அடிப்படையில் சில பகுதிகள் நீர்நிலை என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளதால், பட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, வருவாய் துறை உயரதிகாரிகளுடன் பேசி, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு பட்டாவா...? இனி எல்லாம் நாசம்.